தமிழ் வலையுலகத்திற்கு என் பெயர் புதியதாக இருக்கலாம். நான் புதியவனல்ல. இங்கு நடக்கும் நிகழ்வுகளும் இன்ன பிறவும் நான் நன்கறிவேன்.வலைஎழுத்து என்பது பொழுது போக்கு என்பதாகவும், குடுமிப்பிடி சண்டைகளுக்காகவும் ஆகிப் போன பின்னால் தூய தமிழில் எழுதி என்ன பயன்?
தமிழ் வலையுலகம் எப்போது அடுத்த கட்டத்திற்குத் தன்னை எடுத்துச் செல்லப் போகிறது? திரைமணம் என்று தனியாக நிறுவிய தமிழ்மணம், இலக்கியமணத்திற்கு புதுவீடு அமைத்துத் தருவது எப்போது?
நகைச்சுவை, அனுபவம், சினிமா, அரசியல், புனைவுகள், சமையல் என்ற பிரிவுகள் இருக்கும் போது இலக்கியத்தை யாருமே சீண்டிப் பார்ப்பதில்லையே?முன்பு சிலர் வெண்பா எழுத சொல்லித் தந்தனர். ஒருவர் சில சங்கப் பாடல்களிலிருந்து ஒப்புமை காட்டி கதைகள் சொல்லிவந்தார்.
பாரதியோ, வள்ளுவனோ வாழ்ந்த போது கிடைக்காத மரியாதை அவர்கள் மரித்த பின்புதானே அவர்கள் படைப்புகளுக்குக் கிடைத்தது?
ஆனால் இணையத்தில், தமிழிலக்கியமோ, கனியிருப்பக் காய்கவர்ந்ததைப் போல் இருக்கிறது.
அன்புத் தமிழ் நெஞ்சங்களே, தமிழின் தீஞ்சுவையை நீவிர் அறிய மாட்டீரோ? அதைப் பருகிக் களிகொள்ள உங்கள் உள்ளம் விரும்பாதோ?
இன்று வலிமையான ஊடகமாக விளங்குகின்ற திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் வட்டார வழக்கு மொழியே அதிக அளவில் பயன்படுத்தப் படுவதும், இலக்கியத் தமிழில் புத்தகங்கள் கூட வெளிவராமல் இருப்பதும் தமிழின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, வாழ்விற்கே உகந்ததல்ல.
ஆகவே, நான் எனது சிறு முயற்சியாக தமிழில் எழுதவே விழைகிறேன்.
5 comments:
//ஆகவே, நான் எனது சிறு முயற்சியாக தமிழில் எழுதவே விழைகிறேன்//
வாழ்த்துக்கள்.
க. சுரேந்திரன்
அகம் புறம்.
ஹா ஹா! நீங்கள் மற்றவர்களை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என சொல்லவில்லை என நினைத்து கொள்கிறேன்.
//அன்புத் தமிழ் நெஞ்சங்களே, தமிழின் தீஞ்சுவையை நீவிர் அறிய மாட்டீரோ? அதைப் பருகிக் களிகொள்ள உங்கள் உள்ளம் விரும்பாதோ?//
அப்படி என்னதான் எழுதி இருக்காங்க! நீங்கள் எழுதுங்கள்.
வாழ்த்துகள். இலக்கியம் படையுங்கள்.
நன்றி சுரேந்திரன்
ஹா ஹா! நீங்கள் மற்றவர்களை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என சொல்லவில்லை என நினைத்து கொள்கிறேன்.
//அன்புத் தமிழ் நெஞ்சங்களே, தமிழின் தீஞ்சுவையை நீவிர் அறிய மாட்டீரோ? அதைப் பருகிக் களிகொள்ள உங்கள் உள்ளம் விரும்பாதோ?//
அப்படி என்னதான் எழுதி இருக்காங்க! நீங்கள் எழுதுங்கள்.
வாழ்த்துகள். இலக்கியம் படையுங்கள்.
///
நன்றி ராதாகிருஷ்ணன்.
வாருங்கள்...
இலக்கியக் கடலின் கரையில்
கூட்டாகக் கால் நனைப்போம்!!!
எனக்கு இலக்கியம் தெரியாது, எனினும் கற்று கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
Post a Comment